இகாமத் சொல்லப்பட்டால் பர்லான தொழுகையை தவிர வேறுதொழுகை கிடையாது

வழமையானது
பத்வா ஸெய்லாணி :

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு நபிஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் கூறியதாக பின்வருமாறு பகர்ந்தார்கள்

இகாமத் சொல்லப்பட்டால் பர்லான தொழுகையை தவிர வேறுதொழுகை கிடையாது. {முஸ்லிம்}

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின்இந்த ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்னவெனில்

யாராவதுஒருவர் பள்ளிவாசலுக்கு சமூகமளித்து ஸுன்னதான தொழுகைகளைதொழுது கொண்டிருக்கும் வேளையில் பர்ள் தொழுகைக்காக இகாமத்சொல்லப்பட்டால் அவர் அந்த் ஸுன்னதான தொழுகையை விட்டு விட்டு பர்ள் தொழுகையை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறே நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்பள்ளியில் இருந்த சமயம் முஅத்தின் இகாமத் சொன்னதன் பின்னர் ஒருமனிதன் தொழுவதைக் கண்ட நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அவரை விசாரணை செய்தார்கள்.

இதனை நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின்பின்வரும் நிகழ்ச்சி எமக்கு எடுத்து காட்டுகிறது.

இப்னு புஹைனா ரழியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது:

ஸுபஹ் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டதும் ஒரு மனிதர்முஅத்தின் இகாமத் சொல்லும் போது இரண்டு ரகஅத்துகள் தொழுதுகொண்டிருந்ததை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்கள்கண்டதும் , நீ ஸுபஹை நான்கு ரகஅத்துகளாகவா தொழுகிறாய் ? எனக்கேட்டார்கள். (முஸ்லிம்).

அப்துல்லாஹ் பின் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:

சுப்ஹுத் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பின் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுது கொண்டிருந்த ஒரு மனிதரைக் கடந்து நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சென்றார்கள்.

அவரிடம் நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏதோ சொன்னார்கள்; என்ன சொன்னார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை.

தொழுது முடித்ததும் நாங்கள் அந்த மனிதரைச் சூழ்ந்துகொண்டு,

“நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மிடம் என்ன சொன்னார்கள்?” என்று கேட்டோம்.

அவர்,

“உங்களில் ஒருவர் சுப்ஹுத் தொழுகையை நான்கு ரக்அத்களாக்கிவிடப் பார்க்கிறார்’ என்று கூறினார்கள் என்றார்.

நூல்: முஸ்லிம்