மழை காலத்தில் வீட்டில் தொழுவதும் அதன் ஆதாரங்களும்

வழமையானது
பத்வா ஸெய்லாணி :

ஓடியோ

அப்துல்லாஹ் இப்னு ஹாரிஸ் அறிவித்தார்.

மழையினால் சேறு ஏற்பட்டிருந்த ஒரு நாளில் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு  ஜும்ஆப் பிரசங்கம் செய்தார்கள்.

பாங்கு சொல்பவர் ‘ஹய்ய அலஸ்ஸலாஹ்’ என்று சொல்ல ஆரம்பித்தபோது ‘உங்கள் கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்’ என்று மக்களுக்கு அறிவிக்குமாறு கட்டளையிட்டார்கள்.

அப்போது அங்கிருந்தவர்கள் சிலர் சிலரை ஆச்சரியமாகப் பார்த்தனர்.

‘இந்த பாங்கு சொல்பவரை விடவும் சிறந்தவர்களான நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் ஜும்ஆ கட்டாயமானதாக இருந்தும் கூடு அவ்வாறு செய்திருக்கிறார்கள்!’

என இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்

நாஃபிவு அறிவித்தார்.
மக்காவை அடுத்துள்ள ‘ளஜ்னான்’ என்ற ஊரில் மிகக் குளிரான ஓர் இரவில் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு  பாங்கு கூறினார்கள். அதன் கடைசியில்

‘உங்களுடைய கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்’ என்றும் கூறினார்கள்.

மேலும் ‘பயணத்தின்போது, குளிரான இரவிலும் மழை பெய்யும் மழைபெய்யும் இரவிலும் முஅத்தின் பாங்கு சொல்லும்போது அதன் கடைசியில்

‘உங்களுடைய கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்’ என்று சொல்லுமாறு முஅத்தினுக்கு நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கட்டளையிடுவார்கள்

என்றும் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு  கூறினார்

Advertisements