+2 முடித்த மாணவ மாணவிகள் நான்கு வருடமும் இலவசமாக பொறியியல் கல்வி படிக்க ஓர் அறிய வாய்ப்பு

படம்

Advertisements

ஸீரா மாநாடு – (December 1st & 2nd ) 2016, துபாய்

வழமையானது
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹ் வபரகாத்ஹூ
இன்ஷா அல்லாஹ், துபையில் 2016 டிசம்பர் 1,2 ம் தேதிகளில்  ஸீரா  மாநாடு நடக்கவிருக்கும் செய்தியை அறிந்திருப்பீர்கள்,
thumbnail_seerahconference
இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக ஆலோசனை (Counseling) மையங்கள் நடைபெற இருக்கின்றது , இதில் மார்க்க அறிஞர்கள் கலந்து ஆலோசனை வழங்கவுள்ளார்கள்,
உங்களின் தனிப்பட்ட மற்றும் பொது வாழ்வில் நீங்கள் ஆலோசனை பெற நினைக்கும் விஷயங்களுக்கு மார்க்க அடிப்படையில் ஆலோசனை வழங்கப்படும்  , குறிப்பாக குடும்பம், குழந்தை வளர்ப்பு  , மற்றும் பொருளாதார பிரச்சனைகள் போன்ற பிரச்சனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு ஆலோசனைகள் மார்க்க அடிப்படையில் வழங்கபப்டும்.
counseling-final
நடைபெறும் இடம் :
டிசம்பர் 1 மற்றும்  2 தேதிகளில் – அல் மனார் . அல் கூஸ் , துபாய்
குறிப்பு:
1. நேரம் ஒரு நபருக்கு 10 – 15 நிமிடங்கள் ஒதுக்கப்படும். இந்த ஆலோசனைக்கு முன்பதிவு செய்வது அவசியம், முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்க படுவார்கள்.
2. முன்பதிவு செய்தவர்களுக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படும், குறிப்பிட்ட நேரத்தில் வர தவறியவர்களுக்கு நேரம் இருப்பின் பிறகு  அனுமதிக்க படுவார்கள்.
முன்பதிவு செய்ய வாட்ஸ்அப் தொடர்பு : 050 4689624
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு பஷீர் – 050 4689624

✳ ✳ ஆஷூரா நோன்பு ✳ ✳

வழமையானது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பு நோற்பதை நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள்..
ஆஷூரா நோன்பு எதற்காக நோற்கிறோம் என்பதை இன்றைக்கு அதிகமான மக்கள் அறிந்திருக்கவில்லை. எதற்காக இந்நோன்பு என்பதைப் பற்றி ஹதீஸ்களில் தெளிவாகவே வந்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். “இது என்ன நாள்?” என்று கேட்டார்கள்.  “இது மாபெரும் நாள்! மூஸா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்” என்று யூதர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள், நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன் என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 3397
நான் தான் மிக உயர்ந்த கடவுள் என்று கூறிய சர்வாதிகார அரசன் கொடியவன் ஃபிர்அவ்னும், அவனுடைய கூட்டத்தினரும் அழிக்கப்பட்ட மகிழ்ச்சியான நாள் தான் ஆஷூரா ஆகும். இதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு தான் ஆஷூரா நோன்பு நோற்கப்படுகிறது.
ஆனால் இன்றைக்குப் பெரும்பாலான இஸ்லாமிய மக்கள் ஆஷூரா நாளை துக்க நாளாக அனுஷ்டித்து இறைவனுக்கு நோற்க வேண்டிய நோன்பை ஹசனார் ஹுசைனார் நோன்பு என்ற பெயரில் அவர்களுக்காக நோற்கின்றனர்.  அல்லாஹ் அல்லாதவர்களுக்காக நோற்கப்படும் நோன்பு நிச்சயமாக இணைவைப்புக் காரியம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
எனவே, இது போன்ற தவறான செயல்களை விட்டும் நாம் விலகிக் கொள்ளவேண்டும்.
ஆஷூரா நோன்பின்  சிறப்புகள்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமலான்) என்னும் இந்த மாதத்தையும் தவிர வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை.
நூல்: புகாரி 2006
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்: முஸ்லிம் 1976
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும் என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்: முஸ்லிம் 1977
யூதர்களுக்கு மாறு செய்வோம்
ஆஷூரா நோன்பு என்பது  பத்தாவது நாள் நோற்கின்ற நோன்பாக இருந்தாலும் யூதர்களும் அந்நாளில் நோன்பு நோற்றதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யூதர்களுக்கு மாற்றம் செய்யும் வகையில் ஒன்பதாவது நாளும் நோன்பு வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, மக்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், (அது) யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே என்று வினவினர். அதற்கு நபியவர்கள், இன்ஷா அல்லாஹ், (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம் என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள்.
மற்றொரு அறிவிப்பில், அடுத்த ஆண்டு வரை நான் உயிரோடு இருந்தால், ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்பேன் என்று கூறியதாக வந்துள்ளது.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 1916, 1917
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒன்பதாவது நாள் நோன்பு நோற்காவிட்டாலும் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்குமாறு கூறியிருப்பதால், நாம் ஒன்பது, பத்து ஆகிய இரண்டு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும்..
இந்த இரு நோன்புகளையும் மற்றும் சுன்னத்தான பர்லான நோன்புகளையும் அதிகமதிகமாக கடைப்பிடிக்கக்கூடிய மக்களாக அல்லாஹ் நம் அனைவர்களையும் ஆக்கிவைப்பானாக…

#முழு_நேர_அகீதா_வகுப்பு

படம்

இன்ஷா அல்லாஹ்  நாளை… சனிக் கிழமை (01-10-2016) காலை முதல் மாலை வரை.. 
பெண்களுக்கு மதரஸா வளாகத்தில் தனி இடவசதி.
#மதிய_உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

#அகீதா_வகுப்பு_4

வழமையானது

இன்ஷா அல்லாஹ் நாளை(01-09-2016) முதல் அகீதா வகுப்பு ஆரம்பம். நமதூர் சகோதர/சகோதரிகள் தங்களுடைய நேரத்தை அடிப்படை மார்க்க கல்வி பெற ஒதுக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம்