ட்ரவுசர் (பேன்ட்) அணிந்து தொழலாமா ?

வழமையானது

பத்வா ஸெய்லாணி :

கேள்வி : ட்ரவுசர் (பேன்ட்) அணிந்து தொழலாமா?

பதில் : ட்ரவுசர் என்பது அவ்ரத்தை வெளியே எடுத்துக் காட்டும் ஒரு ஆடையாகும். எந்த ஆடையை அணிவதால் அவ்ரத் மறைவதில்லையோ அத்தகைய ஆடையை அணிந்து தொழுவதனால் தொழுகை பூரணமாக மாட்டாது.

ட்ரவுசர் போன்ற ஆடையை அணிந்த நிலையில் தொழ வேண்டி ஏற்பட்டால் அந்த ஆடைக்கு மேலால் இன்னுமொரு மேலாடையை அணிந்து கொள்வதன் மூலம் உங்கள் அவ்ரத்தைப் பரிபூரணமாக மறைத்ததன் பின்னால், உங்கள் தொழுகையை நிவேற்றலாம். எனவே ட்ரவுசர் அணிந்து தொழுவது கூடாது.
அவ்ரத்தை மறைப்பதென்பது வெறுமனே தோலின் நிறத்தை மாத்திரம் மறைப்பதல்ல. மாறாக, அவ்ரத்தின் அமைப்பையும் வடிவத்தையும் சேர்த்தே மறைக்க வேண்டும்.
அதனடிப்படையில் தொப்புள் முதல் முலங்கால் வரை ஆண்களின் அவ்ரத் ஆகையால் அப்பகுதியின் வடிவமும் மறைக்கப்படுவதே அவ்ரத்தை பூரணமாக மறைப்பதாக அமையும்.
ட்ரவுசர் அணிவதன் மூலம் அவ்ரத் வெளியே தெரிவதில்லை என சிலர் வாதிக்கின்றனர். அவ்வாறாயின் அவர்களின் வீட்டிலுள்ள பெண்மணிகளுக்கு அதே ஆடையை அணிவித்தால் அவர்களின் அவ்ரத் வெளியே தெரிவதில்லை என அவர்கள் கூற வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு பதில் கூற மாட்டார்கள்.
மாறாக, ட்ரவுசர் போன்ற ஆடைகளை பெண்மணிகள் அணிந்தால் அவர்களின் அவ்ரத்தான இடங்களின் அமைப்பும் வடிவமும் வெளியே தெரிகிறதே என்று கூறுவார்கள். இதனடிப்படையில் வெறுமனே தோலின் நிறத்தை மறைப்பது அவ்ரத்தை மறைக்கிறது என்ற வாதம் தவறானதாகும்.எனவே ஆண்களின் அவ்ரத்தை ட்ரவுசர் போன்ற ஆடைகள் வெளிப்படுத்துவதனால் அதனை அணிந்து கொண்டு தொழுவது தொழுகையைப் பாழாகி விடுகிறது. இதனடிப்படையில் ட்ரவுசர் அணிந்து தொழ முடியாது.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
Advertisements