இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹீமஹுல்லாஹ் கிலாபத்தை அழித்தார்களா ??

வழமையானது

பத்வா ஸெய்லாணி :

கேள்வி : இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹீமஹுல்லாஹ்  கிலாபத்தை அழித்தார்  என்று அவர் மீது சிலர் குற்றம் சாட்டுகிறர்கள். இந்த விடயத்தில் உண்மையான நிலைப்பாடு என்ன?

பதில் : ஷெய்குல் இஸ்லாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹீமஹுல்லாஹ் வாழ்ந்த காலத்தில் அரேபியா உஸ்மானிய கிலாபத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அத்தோடு உலகில் ஏனைய பகுதிகளிலும் வேறு பல கிலாபத்துகளும் இருந்தன.
உஸ்மானிய கிலாபத்தின் ஆட்சியின் போது அரேபியா எங்கும் ஷிர்க்கும் குப்ரும் பரவியிருந்தது. மக்கள் மத்ஹப்களாகப் பிரிந்து அதன் விளைவாக கஃபதுல்லாஹ்வில் நான்கு அதான்களும் , நான்கு இகாமத்களும் , நான்கு ஜமாஅத்தும் கூட நடந்தன. இதனால் அந்த சமூகம் தங்களுக்குள் பிரிந்து வாழ்ந்தது.
உஸ்மானிய ஆட்சியிருந்த போதுதான் மதீனாவின் பள்ளிவாசலுக்கு மேல் பச்சை நிற குப்பா கட்டப்பட்டது. சுருங்கச் சொன்னால் உஸ்மானிய கிலாபத்தின் ஆளுகைக்குட்பட்ட இடங்களில் அனைத்து வழிகேடுகளும் வளர்ந்திருந்தன.
இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹீமஹுல்லாஹ் அரேபியாவில் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்தார். அந்நேரத்தில் இன்றிருக்கும் ஸஊதி நாட்டு மன்னரின் தகப்பனான (பூட்டன் அல்லது அதற்கு முன்வந்தவர்) அப்துல் அஸீஸும் அவரது சகோதரர்களும் இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹீமஹுல்லாஹ் உடைய கல்வியில் பயனடைந்து , இஸ்லாத்தின் கொள்கையைக் கற்றுக் கொண்டார்கள்.
அப்துல் அஸீஸ் ரியாத் நகரைச் சேர்ந்தவராக இருந்தார். அப்துல் அஸீஸின் குடும்பத்தினரின் மார்க்க ரீதியான போக்கைக் கண்ட உஸ்மானிய ஆட்சியாளர்கள், அவரின் குடும்பத்தை அவர்களின் சொந்த மண்ணை விட்டும் வெளியேற்றினார்கள்.
அவ்வாறு வெளியேறியவர்கள் குவைத் சென்று அங்கே அடைக்களம் பெற்றார்கள். அதன் பின்னால் மீண்டும் இரவோடு இரவாக ரியாத் நகருக்கு வந்து அங்கிருந்த ஆட்சியாளரைக் கொன்று ரியாதின் ஆட்சியைக் கைப்பற்றினார்கள்.
அவ்வாறு கைப்பற்றிய பின்னர் ஆட்சியில் இருந்த அப்துல் அஸீஸின் குடும்பத்தினர் தங்களுக்கு மார்க்க ரீதியாக வழிகாட்டிய இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹீமஹுல்லாஹ் அவர்களை ஆலோசனைக்காக தம்மோடு சேர்த்துக் கொண்டர்கள்.
அதன் பின்னால் அரசியல் விவகாரங்களை அப்துல் அஸீஸ் இப்னு ஸஊத் குடும்பத்தினரும் மார்க்க விடயங்களை , இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹீமஹுல்லாஹ் அவர்களின் குடும்பத்தினரும் கையாள்வதாக முடிவு செய்தார்கள்.
ஸஊத் குடும்பத்தினர் ஆட்சியாளர் என்ற வகையில் அந்நாட்டின் ஏனைய பகுதிகளையும் தங்களின் ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்தனர். உஸ்மானிய ஆட்சியாளர்களை அரேபியாவை விட்டும் துரத்திய பின்னால் ,
இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹீமஹுல்லாஹ் அவரது மாணவர்களைச் சேர்த்து ஒரு படையை உருவாக்கினார். அந்தப் படை முஜாஹிதீன் என்று அழைக்கப்பட்டது.
அந்தப் படை மன்னர் அப்துல் அஸீஸின் அனுமதியுடன் நாட்டிலுள்ள பித்அத்களை அழிப்பதற்கென்று தயாரானது. அந்த சீர்திருத்தத்தில் ஒரு பகுதியாக அந்நாட்டில் உயரமாக எழுப்பப்பட்ட அனைத்து கப்ருகளும் தரைமட்டமாக்கப்பட்டன. அனைத்து ஷிர்க்கான குப்ரான நடவடிக்கைளும் நிறுத்தப்பட்டன.
இவ்வாறு நடைமுறைப்படுத்தும் போது அவர்களுடன் போராட வந்தவர்களை அவர்கள் எதிர்த்துப் போரிட்டார்கள். இறுதியில் அந்நாடு அனைத்து வழிகேடுகளை விட்டும் சுத்தமாக்கப்பட்டது.

உஸ்மானிய ஆட்சியாளரை விரட்டியது மன்னர் அப்துல் அஸீஸ் என்றிருக்க உஸ்மானிய கிலாபத்தை இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹீமஹுல்லாஹ் அவர்கள் தான் அழித்தார்கள் என்று குறை கூறுவது தவறானது.

நிச்சயமாக கைப்பற்றப்பட்ட நாட்டை சுத்தம் செய்ததில் இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹீமஹுல்லாஹ் அவர்களுக்குப் பெரும் பங்கு இருக்கிறது.
அவ்வாறு சுத்தமாக்கப்பட்டதன் பின்னால் அந்நாட்டில் பல அஹ்லுஸ்ஸுன்னாவின் உலமாக்கள் உருவாகினார்கள். அது மட்டுமின்றி அந்நாட்டில் மக்கள் எந்தவித அச்சமுமின்றி வாழும் சூழல் உருவானது.
உஸ்மானிய ஆட்சி இருந்த போது ஹஜ் செய்யச் செல்கின்ற ஹாஜிகளைக் கொள்ளையடிக்கும் அச்ச நிலை இருந்தது. அவர்களை வெற்றி கொண்டதன் பின்னால் அந்நிலை மாறி ஹாஜிகள் நிம்மதியுடன் தங்களின் வணக்க வழிபாடுகளைச் செய்ய முடிந்தது.
இதில் ஆல ஸஊதின் குடும்பத்தினரின் பங்களிப்பும் ஆல ஷெக் எனப்படும் இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களின் குடும்பத்தினரின் பங்களிப்பும் முக்கிய இடம் வகிக்கிறது.
எனவே கிலாபத்தை முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹீமஹுல்லாஹ் அவர்கள் அழித்தார்கள் என்பது தவறான கருத்தாகும்.

பின்னூட்டமொன்றை இடுக